பிரிவு நாள்
பழகிய நெஞ்சங்கள்
பிரிகின்ற நேரங்கள்
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்
எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எத்தனை மிடுக்கு!
மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்
கரும்பான நட்பு
குறும்பான காலம்
கலங்காத நினைவு........................
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கள்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!
புகைப்படமும் கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
புத்தகத்தில் மட்டுமல்ல எங்கள் நெஞ்சத்திலும்..
கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
பிரிவான நேரம்..!
என்றாவதொருநாள் நண்பனை எதிர்காண
கேட்ட குரலோ! என நெஞ்சம் விழி காண
நண்பனே! என உள்ளம் உறவாட
கண்டு பேசி சில நேரங்கள் பின்னர்
மீண்டும் அவரவர் பாதையில்!
குழந்தையென மாற நெஞ்சம் கேட்கும்
நண்பனின் தொலை கண்கள் எதிர்நோக்கும்
இக்காலம் இனி என்றும் வருமோ என விழிகளில் நீர் தேங்கும்
இதோ பிரியும் நேரம்! நண்பர்களுக்கு மட்டுமே
நட்புக்கல்ல...