என் மனமே

அன்பே
காலை வேளைகளில்
விழிகள் விழித்திறந்து உன்னை
விரும்பி பார்க்க வேண்டி
வந்து நிற்கும் தருணங்களில்
வேடிக்கையென்று
உடைந்து செல்கின்றதடி!
உன் பார்வைகள்
என்னை காணாமல்!!
தொடராத பயணங்கள்
விடுகதையென்றும்!
பிரியாத உறவுகள்
முடியாத விதியென்றும்!!
படைத்த இறைவன்
வீணாக சில இடங்களில்
காதல் விதைகளை விதைத்துவிடுகிறான்!!
பருவ காற்றுகள்
பல வீசியும்
சில பார்வைகளில்
ஈரம் இல்லாமல் போகின்றபோது!
மலைமேல் தோன்றும்
மழைச்சாரல் கீழ் இறங்கி
மேனியின் மீது வீசும்போது
மனம் எப்போதும்
தீயில் உறங்குகின்றது!!
உறங்கங்கள் எல்லையை என்றோ
உதரி சென்றபோது
இமைகளை தினம் தினம்
தீயில் எரிய வைத்தால்
என் இதயம் தாங்குமா?!
இரவுக்கும் பகலுக்கும்
இடையே அந்திப் பொழுது வந்தால்
அதன் மீது யாரும்
கோபம் கொள்வதில்லை! ஆயினும்
காதலுக்கும் மோதலுக்கும்
இடையே இதயம் வந்தால்
அதனை காயங்களில்
தவிக்க வைத்து வெறுப்பது ஏனடி!!
பகல் நேரத்தில்
பனிக்கட்டி மேலே
பாதங்கள் பட்டாலும்
உயிரே
உன் பாதங்கள் உறைவதில்லை!
இருந்தும் உருகுதவிப்பது
என் மனமே...!