உதரிசெல்கிறேனடி

அன்பே
கண்ணியம் என்னும்
என் கவசக்கூட்டின் மீது
காதல் என்னும் அம்பினை
இதயத்தின் மீது இதமாக
நீ செலுத்தினாய்!
வலிகள் என்பது
எனக்கு புதியதில்லை!
அத உணர்வது
எளிதில்லை!!
அனால் எனோ
இன்னும் இதனை
ஏற்க ஏங்குகின்றேன்!!!
காவ(த)லன் என்ற பெயரில்
காதல் கொண்டு
உன் காலடிகளைப் பார்த்து வந்தால்...
காமன் என்று
எனைக் கண்டு
அஞ்சி ஓடினால்
உயிரே
உலா செல்லும் உலகத்தையே
உதரிசெல்கிறேனடி நான்...!