என்நெஞ்ச தொட்டவளே

சருக்குமரம்போல மனசு
உன்முன்னே சருக்குது
கடினமான என்குரலோ
சின்னக்குயிலா பாடுது
முன்னாடி நடந்துகிட்டு
பாம்பா என்னசீண்டிப்போற
மனசிலுள்ள ஆசைகளை
காவியம்போல தாண்டிப்போற
எளமை ஊஞ்சல்
இளங்காத்தாத்தான் சிலிர்க்குது
காமத்தீ பத்திக்கிட்டா
உடம்பெல்லாம் வேர்க்குது
கடல்போகும் பாதையில
நாமும்கடந்து போனாலென்ன
கண்ணுக்கு தெரியாம
காதலோடுசேர்ந்து வாழ்ந்தாலென்ன !...