முதல் பார்வையிலே காதல்
வியர்வை செழிக்கும் கோடை
காலம்
அனல் பறக்கும் நண்பகல்
நேரம்
கடும் வேலைகள் ஒருசேர என்மீதுப்
போர்த்தொடுக்க...
களைப்பால் என் உறக்கம் பெண் மனதின் ஆழத்தை வென்றிருக்கும்
அந்நிமிடம்
செல்போன் மணிப்போல் எழுந்த
சிரிப்பினில்
மான்களையும் மிஞ்சித் துள்ளி
எழுந்தவன்
இசையினில் அமுதம் பெருகிடும்
நிலைக்கண்டு
ஆசைகள் ததும்பத் திரும்பிய என்
முகமோ
அசைவுகள் இன்றி உறைந்ததடி
பெண்ணே
உனது
களவு புரிந்திடும் காந்தக்கண்களும்
செதுக்கிய சிலைப்போன்ற அழகிய
மூக்கும்
சிரிப்பினில் விரிந்திடும் ரோஜா
இதழ்களும்
வைரங்கள் தோற்றிடும் பளிச்சிடும்
பற்களும்
தேக்காய் மிளிர்ந்திடும் உனது
மேனியும்
உன்னிடத்தில் எனைச்
சிறைக்கொள்ளுதடி
விடுதலை அடைந்து எத்தனை யுகங்கள் கடந்தாலும்
சொர்க்கத்தை வீழ்த்திய இச்சிறைவாசம்
வரலாற்று நினைவாக
என்றென்றும் என் மனதிலே நிலைத்திருக்கும்
அ.ஜுசஸ் பிரபாகரன்

