புல்வெளி

புல்வெளியில்
காதலர்கள் சிரிப்பு
புரிதலற்ற பேச்சுக்கள்
புரியாமல் தவிக்கும்
குருவிகள்
வேடிக்கை பார்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வெட்கத்தில் தலைகுனிந்தாள்
வேர்க்கடலை விற்பவன்
புன்னகையோடு நகர்கிறான் மெல்ல...

எழுதியவர் : ந க துறைவன். (5-Dec-17, 11:21 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : pulveli
பார்வை : 73

மேலே