ஒரு நொடி பார்வைக்காக
உள்ளம் நிறைய
கொள்ளை ஆசை
உன் மீது ...
உன்னை காண
என் கண்கள் நித்தமும்
துடிக்கிறது மின்மினியாய் ....
துணையாய் நீ இருக்க
தூரல் மழையில் கைகோர்த்து
நடக்க ஆசை ....
கண் இமைக்கும் நொடிக் கூட
என் இதயத்தில் நீ இருக்க ஆசை...
இதை எல்லாம்
உன்னிடம் நான் சொல்ல ஆசை....
பல வருடம் உனக்காக
காத்திருக்கிறேன்
ஒரு நொடி பார்வையில்
என்னை தொலைத்து
உன்னை காண .....
எப்போது வருவாய் ?