விதவை
மரணம் என்னும்
பகைவன் உயிர்
பிரித்தான்;
மணமகன் ஆனவன்
பிணமகன் ஆகினான்..
குணவதி என் செய்வாள்...
பொற்சிலை அவள்
கொண்ட பூவும் போட்டும்
பறிகொடுத்து நின்றாள்;
இருண்ட ஆழ்குழி
தன்னை உணர்ந்தாள்
உள்ளம் தளர்ந்தாள் ;
வண்ண வண்ண
கனவுகளை தொலைத்தாள்
வண்ண பூ இன்று
வெள்ளைப்பூ ஆகினாள்...
கண்ணாடி பொட்டில்
நெற்றியை பொருத்தி
பார்க்கிறாள்….
அந்த போட்டு அவள்
நெற்றியில் மீண்டும்
நிலைக்க அன்றி
நல்ல ஆண்மகன்
வேறு இல்லை
இனி இவள்
கைம்பெண் இல்லை
ஐம்பொன் சிலை...
விதவை இல்லை ஒரு
குடும்பத்தின் விதை...
க.நேசன்