வாழ்க்கை பயணம்
காயங்கள் ஆற்றிட கனவுகளில் பயணித்து
பாதையினை மாற்றிடாமல்
பரிணாமம் பல ஏற்று
பள்ளங்களை பக்குவமாய் சரிசெய்து
பயணிக்கும் உன் வாழ்வில்
பாராட்டு பந்தலிலே
பெற்றெடுக்கும் உன் வெற்றிகளும்
நீ பெற்றெடுத்த பிள்ளைகளை
பெருமைக் பட வைத்திடுமே
-திவ்யா சத்யப்ரகாஷ்
செம்பாக்கம் , சென்னை .