காதல்

என்னவளே என்னவளே என்னருகே
நீ இருந்த போதெல்லாம் இந்த
உலகையே நான் மறந்திருந்தேன்
நீதான் என் உலகம் என்றிருந்தேன்
நீ மாமலர், நான் அதில் மகரந்தம்
தேடித் தேடி அலையும் வண்டாய்,
உன்னையே சுற்றி வந்தேன்
பெரும் பித்துக்கொண்டு ,
தேனுண்டபின்னும் மலரை விட்டு
போகாது அதனுள் மயங்கியுறங்கும்
தேன்வண்டாய் இருந்தேனடி
நீ தங்க நெற்கதிராய் இருக்க
தென்றலாய் வந்து உன்னை நான்
வருடியதுபோல் உணர்ந்தேனடி
நீ வந்து என்னருகே இருந்த போதெல்லாம்
இந்த சுகம் போதுமடி
இது ஒன்றே போதுமடி என்று
இருந்தேன் உலகை மறந்து !

இன்று நீ இல்லாமல் போனாலும்
என்னவளே என்னுள் என்னுயிராய்
என்னை இயக்கவைக்கின்றாய்
நாம் ஒன்றாய் இருந்து வாழ்ந்த
காலத்தை எல்லாம் நினைவூட்டுகின்றாய்
காலத்தை வென்றவள் நீ என்றால்
நம் காதலும் அப்படித்தான் என்று
நினைத்து வாழ்கின்றேனடி

நீ இருந்தபோதும் என்னை
வாழவைத்தாய் என் காதல்
கனிரசமாய்,காதலியாய்
நீ இல்லாமல் போனாலும் என்னுள்
உன்னை காண்கின்றேன் இன்னும்
என் காதல் தெய்வமாய் .....அந்த
நினைப்போன்றே போதும்
தனிமையை என்னிடமிருந்து நீக்கி
இனிமையை சேர்க்க ........
இனி என்ன வேண்டுமடி எனக்கு
இன்னும் என்ருகேதான் நீ இருக்கின்றாய்
என்னென்னெஞ்சனத்தினுள்ளே
உலகையே மறந்து வாழ!

எழுதியவர் : (5-Dec-17, 2:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 288

மேலே