முதல் முயற்சி

உன்
விழிதிரும்பும் திசையெல்லாம்
நானருப்பேன்
உன்விழிக்கு எட்டாது
நீ
சூடவிரும்பும் மலராக
பூத்திருப்பேன்
உன்புன்னகை ஒளியில்
உன்
கூந்தலின் இடைவெளியில்
மறைந்திருப்பேன்
உலராத குளியல்நீராக
நீ
பாதம்பதிக்கும் தளங்களில்
புதைந்திருப்பேன்
பிணமாக மண்ணுக்குள் !...