இறுதி வரை அவள் துணை வேண்டும்
கண்டேன் அவளை உலவும் வண்ண நிலவாய் விண்ணில்
மயக்கும் ரதமாய் அசைந்து சென்றாள் கண் முன்னில்
குத்துகிறாள் சதாவும் கயல் விழி முட்களால் என் கண்ணில்
நினைவுகளைப் புளிபோல் கூட்டித் தடவுகிறாள் புண்ணில்
விலகாமல் அவள் வேண்டும் மகிழ்விலும் பிறழ்விலும் என்னில்
ஆக்கம்
அஷ்ரப் அலி