அவளும் அவனும்
உரைபனி உருகிடும் மாலை நேரத்தில்
கரைதொட்டு உரசும் அலையின் ஈரத்தில் ;
செல்போன் சிக்னல் போல்
விட்டுவிட்டு துடித்தது இரு இதயம்....
மெல்ல மறைத்தாள் அவள் ,
சொல்ல நினைத்தான் அவன்...
காதல் தொடர்வது எதனால் என்றால்??
விழியில் என்றாள் அவள்!
விரலில் என்றான் அவன்!
முரணாய் அமைந்தது வாழ்க்கை...
அரணாய் அமைந்தது காதல்!!
screenshot போல் நொடிகள் உரைய
அவள் மைவிழிகள் காவியம் வரைய ...
மெய்மறந்தான் அவன் ஒவ்வொரு நொடியும்!
சண்டைகளில் அவன் கோபம் கொண்டான்;
சமாதானத்திற்கு அவள் ஏக்கம் கொண்டாள்;
அவள் கன்னக்குழியின் துவாரத்தில்
கரைந்தது இவன் கோபம் ..
அவன் கெஞ்சலின் ஓரத்தில்
மறைந்தது இவள் காயம்..
காதலுக்கு கண்ணில்லை எனில் ....
கண்டதும் காதல் கவிதையிலும் பொய்யே !!
அனைவர்க்கும் தேவை தூய்மையான அன்பே..
அன்பே காதல் எனில்..
காதல் என்றும் பொய்யில்லையே !