வரவேற்புரை கவிதை
உதிர்ந்த நம்வாழ்வின்
உன்னத நொடிகளாய்
பள்ளி இருக்க...
விரிந்திருக்கும் மொட்டுக்களாய்
கல்லூரி இதோ...
பள்ளி அறை கண்ட உங்கள் பாதங்கள்
கனவுகளை எதிர்நோக்கி
கல்லூரியில் கால்பதிக்க
அறிமுகம் இல்லா முகங்கள்
இங்கு முகவரிகள் தேடும்
மூன்று வருட பயணம் இது.....
இங்கு பயணிகள் பல....
தேடல்கள் பல....
வழிகாட்டிகள் பல....
போட்டிகள் பல....
தோல்விகளும் பல....
வெற்றிகளும் பல....
தேடல்களை தேடித் திரிந்து
வழிகாட்டிகளின் தோழமை கொண்டு
போட்டி என்னும் போர்க்களம் கண்டு
தடைகளை தாண்டி
காவியம் படைத்திட
வரவேற்கிறோம்...
சிகரங்களை எட்டிப்பார்க்காது
சிந்தனைகளை சிகரம்மேல் வையுங்கள்
சிகரங்களும் உங்கள் சிரங்களுக்கு கீழ்!