ஓய்ந்து முடிந்தது ஒகி காத்திருக்கிறது சாகர்

புதுப் புது பெயர்களில் வந்து
புரட்டிப் போடுகிறது வாழ்க்கையை புயற்காற்று !
கரை கடந்து அனுமதியின்றி உள்ளே நுழைந்து
பசுமை மரங்களையும் பூமலர்ச் செடி கொடிகளையும் வேரோடு
பிடிங்கி எறிகிறது ஈரக் கடலிலுருந்து வந்த நெஞ்சில் ஈரமில்லா காற்று !
மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீண்டு வரவில்லை
ஆழ்கடலில் சென்றவர்களுக்கு கடலின் ஆழத்தில் சீவ சமாதி
மனைவி குழந்தைகள் உற்றார் உறவினர் கண்ணீர் கடலில் !
இரக்கமற்ற இயற்கையின் சீற்றம்
மனிதர் வாழ்வுக்குக் கல்லறை !

ஓய்ந்து முடிந்தது ஒகி ! காத்திருக்கிறது சாகர் !
இறைவா மண்ணில் மனிதர்களை வாழ விடு!

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-17, 8:05 am)
பார்வை : 1029

மேலே