சுடும்

சுடும் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்

நெருப்பை
தொட்டபின்
சுடும் என்பது
பட்டறிவு !

நெருப்பை
தொடாமல் சுடும்
அறிந்து கொள்வது
அனுபவ அறிவு !

நெருப்பை
அறிவுள்ளவன் தொட்டு
வேதனைப்பட்டு
நாளும்
அல்லல்படுகிறான் !

நெருப்பை
அனுபவமுள்ளவன்
தொடாமல்
மகிழ்வது போல்
அனுபவ உள்ளவன்
வாழ்விலும்
உயர்நிலை அடைகிறான் !

பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (8-Dec-17, 12:48 pm)
Tanglish : sudum
பார்வை : 104

மேலே