உயிர்விடும் உழவன்

ஏர் ஏந்தும் கரமது - நம்மைச்
சோர் ஏந்த செய்வது !
நிர்வான நிலையிலே -இன்று
நிலையற்று வாழ்வது !
பயிர் தரும் பஞ்சவன் நிலையன்று
பஞ்சத்தில் வீழ்வது !
காலை எழும் சூரியனும்- இன்று
கண்ணீரை சுமக்குத்து!
கருணைமிகு கருமுகில்கள்- என்று
காணாமல் போனது?
வறட்சியற்ற வயல்கள் -இன்றோ
வாழ்வற்று வீழ்ந்தது !
உயிர் காக்கும் உழவன் -இனி
உலக வாழவைத் துறப்பதா ?
தன்மானம் காத்து -அவநிலை
அழியும் நாளெதுவோ ?

எழுதியவர் : தினேஷ்குமார் .இ (8-Dec-17, 10:05 pm)
பார்வை : 113

மேலே