தினேஷ்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தினேஷ்குமார் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 08-Jul-2002 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 264 |
புள்ளி | : 4 |
ஒரு கனலோடு!
உன் விழியதைக் காணும்
வழிதனைத் தேடி தவிக்கின்றேன்
நீ மொழிந்திடும் தமிழின்
இனிமையைக் கேட்கத் துடிக்கிறேன்
உன் சிரிப்பொலி சிதறும்
மணித்துளி அதனில் தொலைகின்றேன்
நீ நடந்து சென்ற
சுவடுகள் காணவே அலைகின்றேன்
பகலில் ஒளிரும் பகலவன்
கண்டிட மறக்கின்றேன்
உன்னைக் காணா ஒரு
நொடிதனிலும் இறக்கின்றேன்
இரவில் மிளிரும் நிலவின்
ஒளியில் நனைகின்றேன்
எனினும் உந்தன் நினைவில்
தானடி தொலைகின்றேன்
என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்
இரவின் இருளில் மலரும் நிலவாய்
நிலவின் ஒளியில் ஒளிரும் சுடராய்
உலகில் அழகாய் பொழியும் மழையாய்
உழியது செதுக்கும் கலைமிகு சிலையாய்
பாரில் பிறந்த பச்சைக் கிழியாய்
எழிலே நிலையென கனிந்த கனியாய்
அழகாய்ப் பிறந்த மெல்லிய முகிலாய்
தளிரில் தூரும் குளிரும் பனியாய்
என் உயிரைப் பறித்த காதல் விழியே !
ஏர் ஏந்தும் கரமது - நம்மைச்
சோர் ஏந்த செய்வது !
நிர்வான நிலையிலே -இன்று
நிலையற்று வாழ்வது !
பயிர் தரும் பஞ்சவன் நிலையன்று
பஞ்சத்தில் வீழ்வது !
காலை எழும் சூரியனும்- இன்று
கண்ணீரை சுமக்குத்து!
கருணைமிகு கருமுகில்கள்- என்று
காணாமல் போனது?
வறட்சியற்ற வயல்கள் -இன்றோ
வாழ்வற்று வீழ்ந்தது !
உயிர் காக்கும் உழவன் -இனி
உலக வாழவைத் துறப்பதா ?
தன்மானம் காத்து -அவநிலை
அழியும் நாளெதுவோ ?
என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்