தமிழ் கவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் கவி |
இடம் | : Devakottai |
பிறந்த தேதி | : 18-Apr-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 408 |
புள்ளி | : 20 |
Life is love 😍adi endrum un ninaivil rn தமிழ் கவி
களையெடுத்தும் கதிரறுத்தும்
காய்த்துப்போனக் கைகள்
காலையிலே கதிரவனுக்கு முன்
கோலமிட்ட வேளையிலே,
வெளிச்சமா ஓரு உருவம்
வெள்ள சட்டை போட்டு வர
தல தூக்கி யாரதுனா பாத்த நேரம்
தடுமாறி தல குனிந்தேன்
உள்ள(ம்) பூரா ஒரே வெக்கம்
வரைந்த கோலத்த வாசல்லே போட்டு
பதட்டத்தோட படியேல்லாம் ஏரி
முச்சந்தில நின்னு உன் முகத்த பாத்தா!
ஒரே மோகம்
நொடிக்கு ரெண்டு தடவ சிமிட்டும் கண்ணு
அதிசயத்த பாத்த மாட்டம்
அப்படி ஒரு பார்வ
இருக்கதும் தெரில
நடக்குறதும் புரியல
பறவ மாட்டம்
ரேக்க மொளச்சு பறந்து கெடந்தேன்
திரும்பி பாத்துட்டு போ மாமா
சிறுக்கி ஒரு சிரிப்பு சிரிப்பேன்
சாதி(தீ)
இந்த தீயணைக்க
இங்கு தீர்வு இல்லையோ
வாழ்வு அது ஒரு முறையே
நாம் வாழ்வதும் ஒரு முறையே
இருக்கும் வரை இன்பமாய் இரு...
இடர்பாடுகளை விரட்டி விடு
இன்பம் கண்டு ஆடிவிடாதே
துன்பம் கண்டு துவண்டுவிடாதே
இன்றும், என்றும், என்றென்றும்....
_தமிழ்கவி
வேண்டா விருப்பாய்
வாழ்வதற்கு...
இறைவன் தரவில்லை
இரண்டு, மூன்று
வாழ்க்கையை
இருப்பதை வைத்து
இனிமையாய் வாழ்ந்திடு...
_தமிழ்கவி
உனக்கு பேதை என்ற பெயர் உள்ளதாளோ
நீயோர் மேதையாக உள்ளாய்
அடியில் நெருப்புடன் ஆவி பறக்க
அறுசுவை உணவு சமைத்த
நீ
சாவ்லா போல் சகஜமாய்
அடியில் நெருப்புடன் ஆகாயம் பறக்கிறாய்
உனக்கோ கல்வி இல்லை
என்று சொன்னவர்கெல்லாம்
ஆசிரியயாய் பாடம் புகட்டுகிறாய்
ஆண்களின் ஆதியும் நீயே
அந்தமும் நீயே
நீ செய்யா உதவியா
இல்லை...
நீ இல்லா பதவியா
அகிலத்தில் ஆண்களின்
அரசாங்கமே உன் கையிலே
அடுத்தோர் ஜென்மம்
எனக்கிருந்தால்
நான் நீயாக தான் பிறக்க வேண்டும்....
=தமிழ் கவி.
நேசித்தேன்
உன்னை மட்டுமல்ல
உன் உண்மையான
அன்பயும்தான்
சுவாசித்தேன்
உன்
உண்மையான
காதலையும்
உள்ள உணர்ச்சியையும் தான்
யாசித்தேன்
மீண்டும் ஒரு வாழ்வு
அதுவும் உன்னுடன்
உன்
காதலனாக வேண்டுமென்று
கிடைக்குமா
ஆசையுடன் உன்
அன்புக்குரியவன்
யாரும் இல்லா தனிமையில்
வேர்களோடு பேசுகிறேன்
மலராகிய நான்!!!
கண்டன கண்கள்
உன்னை காலையில்
இதயத்தில் இன்பம்
தீ இன்றி இருட்டு அறையில்
மெழுகின் ஒளி பரவுவது போல்
என் இருட்டு இதயத்தில் பரவினாய்
காதோரம் சில்லென கற்று
காணவில்லை நான்
கரணம் நீ
முதல் பார்வையில்
உன்னை கண்டேன்
உன்
இரு கண்கள்
கைது செய்தன
காதல் சிறையில்
நான்
என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்
பயிர்கள் கதறுகின்றன
காணவில்லை
மார்கழி மழை
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,