பெண்

உனக்கு பேதை என்ற பெயர் உள்ளதாளோ
நீயோர் மேதையாக உள்ளாய்
அடியில் நெருப்புடன் ஆவி பறக்க
அறுசுவை உணவு சமைத்த
நீ
சாவ்லா போல் சகஜமாய்
அடியில் நெருப்புடன் ஆகாயம் பறக்கிறாய்
உனக்கோ கல்வி இல்லை
என்று சொன்னவர்கெல்லாம்
ஆசிரியயாய் பாடம் புகட்டுகிறாய்
ஆண்களின் ஆதியும் நீயே
அந்தமும் நீயே
நீ செய்யா உதவியா
இல்லை...
நீ இல்லா பதவியா
அகிலத்தில் ஆண்களின்
அரசாங்கமே உன் கையிலே
அடுத்தோர் ஜென்மம்
எனக்கிருந்தால்
நான் நீயாக தான் பிறக்க வேண்டும்....
=தமிழ் கவி.

எழுதியவர் : தமிழ் கவி (11-Dec-18, 7:20 pm)
சேர்த்தது : தமிழ் கவி
Tanglish : pen
பார்வை : 1819

மேலே