பாரதிக்கு

கவிதையை வேளாண் செய்த
காவியத் தலைவா
தேச நலனுக்கே
தேகம் வளர்த்தாயோ?
தேவைக்குக் கூட நீ
தேடவில்லை செல்வத்தை
தெரிந்ததெல்லாம் உமக்கு
பாட்டு பாட்டு பாட்டோ பாட்டு
பாரதம் உய்ய நீ பாடுபட்டாய்
பரங்கியர் உள்ளம் அதிர
பாட்டால் வேட்டு விட்டாய்
பகலவன் சூட்டை விட - உன்
பாட்டு சூடோ பல்லாயிரம் வெப்பமையா
படித்ததால் தெளிவு பெற்றோம் - உம்மை
பாதம் பணிந்து பண்னால் போற்றுகின்றோம்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Dec-18, 3:43 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : paarathikku
பார்வை : 132

மேலே