பாரதி
பா புணைந்தான்
பாப்பாவிற்கு
ஓடிவிளையாடச்
சொல்லி
பாருக்கு எழுதினான்
அச்சமில்லையென
உச்சிமீது வானிடிந்து
வீழும் போதும்
கண்ணம்மாவின்
காதலை சொன்னான்
காற்று வெளியிடை
கண்ணம்மா என்று
அவள் காதலை
என்னி களித்தான்
காதல் காதல்
காதல்
காதல் போயின்
சாதல் என்று
குயில் பாட்டில்
கூவினான்
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோமென
பெண்ணியம்
பேசினான்
காணிநிலம் வேண்டும்
என்று
கூட்டு களியினிலே
கவிதை கொண்டு
தரவேணும் என்று
பராசக்திக்கு
விண்ணப்பித்தான்
பார் ரதி இன்று
பார்போற்றும்
பாரதியின்
பிறந்த நாளாம்
தீராத விளையாட்டு
பிள்ளை
தெருவிலே
பெண்களிடத்து
ஓயாது தொல்லை
என்று
கண்ணனின்
குறும்பை ரசித்தான்
வந்தேமாதரம்
என்போம் என்ற
மந்திரத்தோடு
மா நிலத்தாயை
வணங்கிட
சொன்னான்
பாருக்குள்ளே நல்ல
நாடு
நம் பாரதநாடு
என்ற
சொந்தம் கொண்டாடி
நீரதன் புதல்வர்
இந்நினைவை
அகற்றாதீர்
என்று நெஞ்சில்
நிறுத்தினான்
செந்தமிழ் நாடு
எனும் போதினிலே
இன்ப தேன்வந்து
பாயுது காதினிலே
மொழியின் மேன்மையே
உணர்த்தினான்
ஜாதிகள் இல்லையடி
பாப்பா என்ற
பா வை பாப்பவின்
மனதில் பதியும் படி
அவன் எழுதியதை
பார் ரதி
இன்று அவன் பிறந்த
நாளாம்
போற்றுவோம்
நாமும் இன்று
செந்தமிழில்
கவிமாலை கோர்த்து