திரும்பி பாதுடு போ மாமா

களையெடுத்தும் கதிரறுத்தும்
காய்த்துப்போனக் கைகள்
காலையிலே கதிரவனுக்கு முன்
கோலமிட்ட வேளையிலே,

வெளிச்சமா ஓரு உருவம்
வெள்ள சட்டை போட்டு வர
தல தூக்கி யாரதுனா பாத்த நேரம்
தடுமாறி தல குனிந்தேன்
உள்ள(ம்) பூரா ஒரே வெக்கம்

வரைந்த கோலத்த வாசல்லே போட்டு
பதட்டத்தோட படியேல்லாம் ஏரி
முச்சந்தில நின்னு உன் முகத்த பாத்தா!
ஒரே மோகம்

நொடிக்கு ரெண்டு தடவ சிமிட்டும் கண்ணு
அதிசயத்த பாத்த மாட்டம்
அப்படி ஒரு பார்வ

இருக்கதும் தெரில
நடக்குறதும் புரியல
பறவ மாட்டம்
ரேக்க மொளச்சு பறந்து கெடந்தேன்

திரும்பி பாத்துட்டு போ மாமா
சிறுக்கி ஒரு சிரிப்பு சிரிப்பேன்

எழுதியவர் : தமிழ் கவி (6-Jan-22, 1:21 pm)
சேர்த்தது : தமிழ் கவி
பார்வை : 69

மேலே