குரல்கள்
கடலிலும் தத்தளிக்கிறார்கள்
கரையிலும் தத்தளிக்கிறார்கள்.
கடலிலும் வெள்ளம்
கரையிலும் வெள்ளம்
தரையிலும் வெள்ளம்.
தவித்த வாய்க்கு
தண்ணீர் கிடைக்கவில்லை
பசித்த வயிறுகள்
பட்டினியில்.
கூக்குரல்களுக்கு
குரல்களில் சமாதானம்
குரல்களில் மட்டுமே.
இயற்கை
ஏமாற்றிவிட்டது.
நீங்களும் ஏமாற்றாதீர்கள்.