கால கொடுமை
நாட் காட்டியை
கிழித்த தருணம்
கண்ணில் அகப்பட்டது
இன்று
சர்வதேச ஊழல் தடுப்பு தினமாம்
இதை விட
நாம் முட்டாள்களாய்
முத்திரை குத்தபட்ட தினம்
என்றெழுதி இருக்கலாம்
ஊழல் மந்திரிகளின்
அவையில
மாமுலில் திலைக்கும் காவல் துறையும்
லஞ்சத்திற்கென்றே பிறந்த
அதிகாரிகளும்
இயன்றவரை சுரண்டும்
நாட்டில்
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் என்பது
காலக்கொடுமை