அண்ணா நூற்றாண்டு நூலகம்
நூலகத்தின் பிரம்மாண்டம்
நூற்றுக்கணக்கில் புத்தகங்கள்
சென்னை தானா? வெளி நாடா?
பிரமிக்க வைக்கும் கட்டிடம்
குளிரூடப்பட்டு புத்தகங்களும்
கூதூகலிக்கின்றன...
சில்லென்ற அறைக்குள்
சிலாகித்துப் படிக்கும் அழகர்கள்...
குழந்தைகளுக்கான அறையில்
விருக்ஷத்தின் அடியில்
மெய்மறந்து படிக்கும் சிறார்கள்
பார்க்கையில் அரசுக்கு
நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை
கண் தெரியாதவருக்கும் பிரெயில் வசதிகள்...
அதற்குள் ஒரு குறை
லிப்ட் பக்கத்தில் வெற்றிலை துப்பல்...
என்று மாறும் நம் சமுதாயம்?
அரசு வேறு மக்கள் வேறா?
இன்னும் புத்தகம் எடுக்க முடியாது
அரசு ஆணை பிறப்பிக்கவில்லை
ஒரு டீ குடிக்க காண்டீன் இல்லை
தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை
மாறும் கட்சிகள் பயமுறுத்துகின்றன
தலைமைச் செயலகம் மூடியது போல்
நூலகமும் செயல் இழந்து விடுமோ
பயம் பற்றுகிறது...
மக்கள் பணம் பாடாய்ப் படுகிறது
கேட்பதற்கு நாதி இல்லை
சமச்சீர் கல்வி முறைக்கு
குழந்தைகளையே படுத்துபவர்கள்
நூலகத்தை இயங்க விடுவார்களா?
தெய்வம் தான் வழி காட்ட வேண்டும்...