உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி6

" ஜெனிபரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யவே இல்லையே அம்மா. உங்களுக்கு எப்படி தெரியும்? ",என்றான் ஜெகன் ஆச்சரியம் மேலிட.

" நீ காட்டுக்கு போன போது அவ நம்ம வீட்டுக்கு வந்தா பா. ",என்று புன்னகைத்தவாறு காயத்ரி அம்மா சொல்ல, ஜெகன் கந்தசாமியைப் பார்த்தான்.

" எனக்குத் தெரியாது பா. ", என்று விழித்தார் கந்தசாமி.

" இங்கேயே பேசிக் கொண்டிருந்தாள் எப்படி? உள்ளே வாங்க. ", என்று அழைத்தாள் ஜெனிபர்.

உள்ளே வந்ததும் கந்தசாமி ஒரே ஆச்சரியம்.
கனகராஜுக்கும் தான்.

பள்ளித் தோழர்கள் அல்லவா!?

இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

இளமையில் செய்த குறும்புகள், மகிழ்ச்சியான தருணங்கள் கண்கள் முன்னே வந்து போயின.

சுவாராஸ்யமான பேச்சுகளில் பெற்றோர்கள் மூழ்கிப் போக, நடப்பது எதையும் ஜெனிபர், ஜெகனின் கண்கள் பேசிக்கொண்டனர்.
ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்க, பெரியவர்களின் பேச்சு நின்று அமைதியாக சிறியவர்களை கவனிக்க அவர்களை எல்லாவற்றையும் மறந்து, வேறு உலகில் பயணமாகிக் கொண்டிருந்தார்கள்.

" ஜெகன். டேய் ஜெகன்! "

இம்மினியும் அசைவில்லை.

" ஜெனிபர். ஹெய் ஜெனி! "

அங்கும் அதே நிலை..

" டேய் கனகு! இவ்வளவு கூப்பிடுகிறோமே! இவர்கள் கொஞ்சமாவது காதில் வாங்குகிறார்களானு பார்த்தியா? ", என்றார் கந்தசாமி தன் நண்பரிடம்.

" அது ஒன்னுமில்லடா கந்தா. இருவரும் இந்த லோகத்திலேயே இல்லை. இனியும் இவர்களை பிரித்து வைப்பதில் நியாயமில்லை. சீக்கிரமே கல்யாணத்தை முடித்துவிட வேண்டியது தான். நீ என்ன சொல்ற? " ,என்றார் கனகராஜ்.

" ம்ம். அதுவும் சரி தான்டா. ",என்று கந்தசாமி நண்பனை ஆமோதிக்க, " அப்புறமென்ன? இப்பவே பேசி முடிச்சுடலாம் ", என்றாங்க டீச்சரம்மா மேரி.

நல்ல நாள் பார்த்து தேதியை முடிவு பண்ணிக்கலாமென்றிட, " கோவில்ல தான் கல்யாணம் நடக்கணும் இந்து முறைப்படி. ", என்றாங்க காயத்ரி அம்மா.

" அதெப்படி நாங்க கிறிஸ்டின்ஸ். சோ, கல்யாணம் சர்ச்ல தான் நடக்கனும். ",என்றாங்க மேரி.

கனகராஜும், கந்தசாமியும் அமைதியாக இருந்தார்கள்.
காரணம், இரு பெண்கள் பேச ஆரம்பித்துவிட்டால்,
அவர்களாக முடிக்க வேண்டி வேண்டும்.
இடையில் வேற யாரு போனாலும் வாங்கிக் கட்டிக்க வேண்டியதான்.

" என்ன ஜெனி! இது நம்ம கனவு உலகிலும் இவர்கள் கல்லெறிகிறார்களே. ", என்றான் ஜெகன்.

" இனியும் அமைதியாக இருக்க வேண்டாம். நாம் பேசலாம். ", என்றாள் ஜெனி.

" கோவில்ல தான். "

" சர்ச்ல தான். "

" இல்ல. கோவில்ல தான். "

" அதலாம் இல்ல. சர்ச்ல தான். "

என்று மேரியும், காயத்ரியும் மாறி மாறி வாதம் போட, அவர்களை ஓய வைப்பது பெரும்பாடாகிவிட்டது.

கடைசியாக இருவரும் சற்று அமைதியாக, " கல்யாணம் நடக்கப் போவது கோவிலில் கிடையாது. சர்ச்லயும் கிடையாது. ",என்றான் ஜெகன்.

" என்னப்பா சொல்ற? ", என்றார் காயத்ரி அம்மா.

மாப்பிள்ளை சொல்வதைக் கவனிக்கத் தயாரானார் மேரியம்மா.

" கோவிலையும், சர்ச்-ஐயும் விட புனிதமான இடம் ஒன்று இருக்கிறது. அன்பே உருவான இடம் அது. அங்குதான் எங்கள் திருமணம் நடக்க வேண்டும். ", என்றான் ஜெகன்.

" அப்படி ஒரு இடம் இருக்கா? ", என்றார் கனகராஜ்.

" இருக்கு அங்கிள். எங்கள் திருமணத்தன்று நீங்கள் பார்க்கலாம். ", என்றான் ஜெகன்.

திருமணத் தேதி முடிவாயிற்று.

நாளை விடிந்தால் திருமணம் என்ற பொழுது, ஜெகன், ஜெனி, இருவரும் தங்கள் பெற்றோர்களுடன் கிளம்பினார்கள்.

கூண்டிலிருந்த ஜோடிப்புறாக்களை விடுவித்தனர்.
அவை பறந்து செல்ல அவற்றை பின் தொடர, குரங்குக்கூட்டம் இருந்த இடம் நோக்கி சென்றனர்.

முன்னே சென்ற ஜோடிப்புறாக்கள் தகவல் கொடுக்க,
குரங்குக்கூட்டம் இவர்களை வரவேற்க தயாராக இருந்தன.

கொஞ்சத் தூரத்தில் வரும் போதே ஜெகன், " இந்த குரங்குகளே என் உயிரைக் காப்பாற்றியவை. மிகவும் அன்பானவை. பயப்படாமல் வாங்க. ", என்றான்.

குரங்குக்கூட்டத்தை நெருங்க அங்கே இயற்கை விருந்துணவு
தயாராக இருந்தது.

ஆளுக்கொரு இடத்தில் அமர வைத்து பழங்களைப் புசிக்கக் கொடுத்தன.

அதோட சில குரங்குகள் தாளமிட , சில குரங்குகள் நடனமாடின.
ஜெகனும் எழுந்து சென்று அவற்றோடு நடனமாட, ஜெனி சிரித்துக் கொண்டே ரசித்தாள்.

இரண்டு குரங்குகள் வந்து ஜெனி அழைத்துச் சென்று ஜெகன் அருகில் விட்டன.
ஜெனியும் ஜெகனைப் பின்பற்றி நடனமாட, பெற்றோர்கள் மகிழ்ந்திருந்தனர்.

காலையில் கல்யாணம் இருக்கிறதென்பதால் அனைவரும் தூங்கிப் போக, ஜெகனும், வயதான குரங்கும் விழித்திருந்தார்கள்.

ஜோடிப்புறாகள் திருமண சேதி தாங்கி, காட்டில் உள்ள விலங்குகளையெல்லாம் அழைத்து வரச் சென்றன.

விடிந்ததும் அனைவரும் அருகில் இருந்த நீர்வீழ்ச்சியில் நீராடி வர, குரங்குகள் எல்லாம் நிரம்ப சத்தங்கள் வர, புலியின் உறுமல் கேட்டு அந்த இடமே அமைதியானது.

ஜெனி பயந்து ஜெகனைப் பற்றிக் கொள்ள, சிங்கத்தின் கர்ஜனை அதிர வைத்தது.

" பயப்படாத, அவை நம் திருமணத்திற்கு வந்துள்ளன. ", என்றான் ஜெகன்.

சிங்கமும், புலியும் வர பின்னே யானைக்கூட்டம் வர, அனைத்து விலங்குகளும் சங்கமித்தன அவ்விடத்தில்..

தவளைகளின் சப்தம் மந்திரமென்று ஒலிக்க, நாகப்பாம்புகள், " உஸ் உஸ்ஸ்ஸ் " என்று இசையமைக்க யானைகளின் நாதஸ்சுரமும் ஒன்று சேர, குரங்குகளின் கைதட்டல்களோடு நடனம் எழில் கொஞ்சிட,
திருமணம் நடக்கிறது.

வயதான குரங்கு கையை உயர்த்தினார்.
அனைத்தும் அமைதியானது.

" ஜெகன், ஜெனிபரை உன் வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள சம்மதிக்கிறாயா? ", என்றது அந்த வயதான குரங்கு.

ஆச்சரியம் மேலிட, " சம்மதம். ", என்றான் ஜெகன்.

" ஜெனிபர், ஜெகனை உன் வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள சம்மதிக்கிறாயா? ", என்றது.

" ஆம் ", என்றாள் ஜெனிபர்.

" அப்படியென்றால் எரிந்துக் கொண்டிருக்கும் அக்னியின் மேல் சத்தியம் செய்யுங்கள் எந்தச் சூழலிலும் ஒருவரை ஒருவர் பிரியமாட்டோம் என்று. ", என்றது.

" அவ்வாறே சத்தியம் செய்கிறோம். ", என்றனர் இருவரும்.

இருவர் கைகளிலும் காட்டு பூக்களால் செய்யப்பட்ட மாலை தருவிக்கப்பட்டது.
இருவரும் மாலை மாற்றிக் கொள்ள, திருமணம் இனிதே முடிந்தது.

" காதலுக்கு முடிவில்லை. திருமணம் காதலின் மாற்றொரு நுழைவாயில் மட்டுமே. ", என்றது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Dec-17, 9:44 pm)
பார்வை : 372

மேலே