சோர்ந்து போகாதே
நழுவிப்போன வாய்ப்புகளை எண்ணி என்ன பயன்?
கரைந்துபோன நேரங்கள் என்ன தந்துவிடப்போகிறது?
மனதில் நிறைந்த வலிகளால் நீ ஏன் தயங்கியே நிற்கிறாய்?
மாறும் மனிதர்கள் அப்படி என்ன மாற்றம் செய்துவிடப்போகிறார்கள்?
உனது கண்கள் காணும் தூரம் உன் எல்லைகளாகட்டும்!!!
உன் கனவுகளில் விரியும் சிறகுகள் உயரங்களுக்கு உன்னைக் கொண்டு செல்லட்டும்!!!
சோர்ந்து போகாதே!! காலங்கள் உனதே!!!