தேவைகள்
தேவைகள் அதிகம்!!!
நம்பிக்கையின் விதைகளில் ஊற்றப்பட நன்னீரான வார்த்தைகள் தேவை,.,
பதைபதைப்பை விடுத்து பாதைகளை உருவாக்க திசைகள் தேவை...
தடுமாறாமல் நடக்க வெற்றியின் காலணிகள் தேவை...
செயல்படுத்தத் துடிக்கும் கனவுகளுக்கு எண்ணத்தோடு இசையும் வடிவங்கள் தேவை...
காணப்போகும் வெற்றியை ஊர்ஜிதம் செய்யும் உயர்ந்த சிந்தனை தேவை..,
எனக்கு முடிவுரை எழுதினவர்கள் முன்பாக, எனது வெற்றியில் நான் நடக்கும் நிகழ்வுகள் தேவை...