தூர இருந்து
கண்ணீரையும் தந்தாய்
கவிதைகளையும் தந்தாய்
கனவுகளையும் தந்தாய்
கானல்நீராகவும் சென்றாய்
நினைவுகளையும் தந்தாய்
நிழலாகவும் வந்தாய்
நிஜமாகவும் வந்தாய்
நிமிடமென கரைந்தாய்
நதியென பாய்ந்தாய்
விதியெனவும் கடந்தாய்
காற்றென வீசினாய்
நேற்றெனவும் ஆனாய்
கடலாகவும் குளிர்ந்தாய்
கனலாகவும் எரிந்தாய்
கடவுளாகவும் தெரிந்தாய்
பூதமாகவும் மாறினாய்
பூஜைமலராகவும் இருந்தாய்
புரியா புதிராகவும் ஆனாய்
மணியோசையாக இருந்தாய்
மரணபயத்தையும் தந்தாய்
தேவதையாக வந்தாய்
மாயங்கள் செய்தாய்
சுழற்காற்றாய் வீசினாய்
சூனியங்கள் செய்தாய்
மந்திரங்கள் செய்தாய்
தந்திரங்களும் கொண்டாய்
மனசை தந்தேன்
மதியை இழந்தேன்
மனம் முழுக்க
மனம் முழுக்க
உன்னை மட்டும்
பதித்து கொண்டேன்
மனம் முழுக்க
மனம் முழுதும்
உனக்குள் மட்டும்
புதைந்து கொண்டேன்
நான் நீயானேன்
நீ நானானேன்
இன்று எப்படி
நான் யாரோவானேன்
காற்றில் பறக்கும்
காற்றாடி ஆனோம்
கடைசியில் நூலறுந்து
கீழே விழுந்தேன்
என்னருகில் உன்னை
தேடி கைநீட்ட
கண்ணே நீ
எங்கோ தூரமாய்
வெகு தூரமாய்
பறந்து நகர்கிறாய்
என் கண்கள்
உன்னை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்க
உன் விழிகள்
என்னை தேட
மறந்து வேறு
காற்றடியோடு கை
கோர்த்த மாயமென்னவோ
என்னவளாக இருந்தாய்
இன்று யாரோவெனவும் ஆனாய்
உன்னவனாக இருந்தேன்
இன்னமும் இருக்கிறேன்
உன்னவனாகவே
தூர இருந்து
உன்னை ரசித்தபடி
உன்னை சுவாசித்தபடி
தான் இன்னமும்
நான் என்று
அறிவாயோ கண்மணி
உயிருக்குள் கலந்த
உசிர் உடம்பில்
உயிர் இருக்கும்வரை
உயிரோடு கலந்தபடியே
காயம் கொடுத்தாலும்
கண்மணி நீயும்
என் கவிதைகளுக்குள்ளும்
என் கனவுகளுக்குள்ளும் !!