நீயில்லாது

இதுவரை நான் கண்டிராத
பெண்ணே!என்னை இழுப்பதுன் கண்ணே!
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம் உன் முகத்தின் அழகோ அகத்தை அறிய செய்கிறது அதில் என்னை
விழச் செய்கிறது
உள்ளம் பாடும் கானம் இன்ப
வெள்ளம் ஓடும் இனி நாளும்
தென்றல் உனை வருடும் உன்
அழகு என் இதயத்தை திருடும்
வண்ணம் ஏழு வண்ணம் உன்
கன்னத்தை வளமாக்குவது திண்ணம்
முகமோ அது முழுமதியோ
குரலோ அது குயிலோ
உடையோ மெல் இடையோ
உனை நெருங்க எது தடையோ
விரல்கள் அது வெண்டையோ
கால்கள் அது வாழையோ நீ
பசுங்கிளியோ!வெண்மயிலோ!
நான் தேடும் புதுமலரோ?
ஆகாரம் இறங்காது உடலோ இனி இயங்காது
நீ இல்லாது எனக்கு வாழ்வேது?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (14-Dec-17, 1:35 am)
பார்வை : 276

மேலே