காதல்

கண்ணுக்கு தெரிந்ததெல்லாம்
ஒன்றே ஒன்று-அதுவே பார்வையில்
காணும் அழகை ரசிப்பதுவே
என் கண்ணெதிரே நீ தோன்றினாய்
பெண்ணே, ரதிபோல் உருகொண்ட
தேவதையாய், என் பார்வை
உன் அழகை ரசித்து ரசித்து
மயங்கி என்னை என் வசம்
இழக்க செய்தது , ஒரு
மந்திரவாதியின் பின்னே
தன வயம் இழந்து அலையும்
பித்தனாய் ஆக்கியது; நீயோ
பெண்ணே உன் முதல் பார்வை
ஒன்றை என் மீது செலுத்திவிட்டு
என் மனதை தொட்டுவிட்டு சென்றுவிட்டாய்
அன்றுமுதல் நானோ உன் பார்வை
மீண்டும் கிடைப்பது எப்போதோ என்று
ஒவ்வொரு நொடியும் உன் நினைவால்,
பசி இன்றி உறக்கம் இன்றி,
உனக்காக காத்திருக்கிறேன்;
நான் உன் அழகில் மயங்கியது
உண்மை என்றறிவாய் பெண்ணே,
நீ இன்றி உலகமே இல்லை என்று
என் பாவி மனம் சொல்லுதடி
நீ கேட்கவில்லையா ? உன் அழகில்
என் மனது பதிந்துவிட்டதடி -மனதில்
நீ சற்று பார்த்தாயானால் புரியும்
அதில் உன்மீது நான் வைத்த காதல்
அச்சாய் பதிந்திருக்கும் !, உன்
அழகை பெண்ணே எப்படி நீ
பார்ப்பது என்று கேட்டாயானால்
நான் சொல்வேன் -அதோ நம் முன்னே
காணும் தாமரைப்பூத்த தடாகத்தின் முன்
நீ சென்று அந்த தடாகத்தின் தெளிந்த
நீரில் உனையே நீ பார்த்தாயானால்
உன்னையும் உன் அழகையும் நீ
கண்டிடலாம் , உன்னுள் என்னையும்
கண்டிடலாமடி பெண்ணே
என் காதலை புரிந்துகொள் கண்ணே
அதை ஏற்றுக்கொண்டு நம் காதலை
வாழவைப்பாய் கண்ணே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Dec-17, 10:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே