நட்பெனும் நண்பனின் அக்ஷயம்

மூடிய தேங்காய் மூடிக்குள்
சுவையான தேங்காய் ,
மூடிய விளாம் ஓட்டிற்குள்
பல நோய்களுக்கு அருமருந்து
விளாம்பழ விழுது ,
அன்பு,நல்லடக்கம்,பண்பு
இம்மூன்றால் உருவான நல்ல
நண்பனுக்குள் நட்பெனும்
அரும்பெரும் அக்ஷயம்
அள்ளி அள்ளி நல்லவை எல்லாம்
தந்திடுமே தம் நண்பருக்கு
தேவைப் படும் போதெல்லாம் ,
அவரை எப்போதும் நல் வழியே
வாழ்க்கை நடத்திச் செல்ல.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Dec-17, 3:36 pm)
பார்வை : 273

மேலே