கயல் விழி
கயல் விழி
வாசம் வீசிய பூவின் வண்ணத்தில்
உன்னழகை நான் அறிந்தேன்
வண்ணங்கள் தந்த வானவில் நீ காட்டியதில்
உன் வண்ணங்கள் நான் நினைத்தேன்
எழத்துக்கள் மினுங்கும் பொன்னியின் கதையை சொல்லியதில் உன் எண்ணங்கள் நான் உணர்ந்தேன்
ஔிமயங்கும் இவ்வுலகம் என்னைப் பாா்த்துக் கொண்டிருக்கின்றன என்று நீ கூறியதில்....
நான் கூடத் தான் மறந்துப்போனேன் இவ்வுலகம் என்னையும் காணுமென்று
காரணம் விழியில்லா இக்கயல்விழியின் விழிஎல்லாம் நீயல்லவோ.....
- சஜூ