சித்திரை முதல் பங்குனி வரை என் காதல்

சித்திரை முதல் பங்குனி வரை என் காதல்

சித்திரை மாதம் சித்திரம் போல் அவளை கண்டேன்

வைகாசி மாதம் வாகைகுளத்தில் அவள் மீது காதல் கொண்டேன்

அவளோடு என் காதல் சொல்ல
ஆனி மாதம் முழுதும் பின் நடந்தேன்

ஆடிமாத இறுதியில் தள்ளுபடிபோல் ஒர் காதல் கடித்தை கையிலேந்தினேன்

ஆவலோடு வாங்கிய அவள் ஆவனியில் கிளித்து தந்த கடிதத்தைக் கண்டு மனம் வருந்தினேன்
தேரடி கோவிலில்

அவள் புராணம் பாடிய புரட்டாசி மாதத்தில் அதிகாலையில் நான் எழுந்தேன்

கடைக்கண்ணால் ஜாடை செய்த ஜப்பசியில் ஐயம் கொண்டு தவித்தேன்

காா்த்திகை மாதம் அவள் தீபம் ஏற்ற அது அணையும் வரை தினம் காத்திருந்தேன்

மாா்கழி குளிரில் அவள் கோலம் வரைய
என் மான்விழி கண்களால் அதை ரசித்து வந்தேன்

பொங்கல் திருநாள் புது தாவணி அவள் உடுத்தி வர தைமாதம் தாலி கெட்டவா என கேள்க நினைத்தேன்

மாத கணக்காய் என் காதல் செல்ல மாசிமாதம் மீண்டும் கவிதை எழுதினேன்
கவிதையை ஆவலில் வாங்கிய அவள் வேகம் கண்டு

பங்குனி மாத காற்றில் பறப்பதாய் நினைத்தேன்
மறுநாளிகையில்..................

சித்திரைமாதம் அவள் திருமணமென்றரிந்தேன்
- சஜூ

எழுதியவர் : சஜூ (16-Dec-17, 7:16 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 221

மேலே