விடையை நோக்கி

எண்ண ஓட்டங்களின் திரையாகிறது மனம் !
என்னவென்று புரியாமலே கண்ணின் ஓரம் ஈரம் !!!

கடந்ததை நினைத்தே கவலைகொள்ளும்
என் நெஞ்சிற்கு புரியவில்லை !
காற்றானது அவையனைத்தும் என்று .....

தனிமையே இனி தாயகம் என்பதை
தயங்கி நிற்கிறது ஏற்றுக்கொள்ள .....
கனவுகள் அனைத்தும் கலைந்த பின்
கருமையானது எனது எதிர்காலம் .....

எழுந்து எதிர்கொள்ள நிற்கும் வேளைகளில்
விழுந்து மடிகிறேன் ஒவ்வொரு முறையும் !

வலிக்கிறது என்று கதறி அழுதாலும்
செவிமடுக்க நான்கு சுவற்றைத் தவிர யாருமில்லை !

ஆச்சர்யக் குறியா கேள்விக் குறியா .....?!
வாழ்வின் விடையை எதிர்நோக்கியே பயணம் தொடர்கிறது .......

எழுதியவர் : ரம்யா CJ (17-Dec-17, 12:16 am)
சேர்த்தது : ரம்யா CJ
Tanglish : vidaiyai nokki
பார்வை : 176

மேலே