ஆயா நீயும் உன் இடியாப்பமும் அருகினில் இருக்கையிலே எனக்கு
கலசத்தை கையிலேந்தி வழிநடையில்
வானத்து தேவன் வா அமுது அருந்து என்றான்
ஆயா பொக்கை வாய் கிழவி தின்னுடா பேரப்புள்ள என்று
இடியாப்ப தட்டினை கையில் தந்தாள்
அமுதும் தேனும் எதற்கு
ஆயா நீயும் உன் இடியாப்பமும்
அருகினில் இருக்கையிலே எனக்கு ...
அமுதம் மறுத்தேன் ஆயாக் கிழவியின்
வெள்ளை இடியாப்பமும் கையிலேந்தி
சுவைத்தவாறே நடந்தேன் !
அமுதத்தை மறுத்தது தவறா ?
இடியாப்பத்தை ஏந்தியது சரியா ?
நீங்களே சொல்லுங்கள் இடித்துரைக்கும்
என் இனிய இடியாப்பத் தமிழ்த் தோழமைகளே !