~பச்ச சாதிகார பயலுக ~ சாதிசண்டாளர்கள்~

~பச்சரிசி இடிச்சி~பச்ச ஓலை வாசற்படியில கட்டி ~பச்ச/எச்ச சாதிகாரிய கட்டிக்கிட்டேன்~என் நல்ல/வெள்ள சாதிய கொன்னுபுட்டேன்~
கட்டின தாலில பச்ச காயல~இச்ச அடங்கள~ பெத்தெடுத்தா எங்க பச்ச புள்ளய~என் ராசா பச்ச புலியாட்டம் இருந்தேன்~

~என் பச்ச ஒடம்புகாரிக்கு பச்சிலை பறிச்சி ~பச்சரிசி சாதம் பரிமாற யாருமில்ல~எச்சில மாரி எங்கள பாத்தாக~ரெண்டு சாதிக்கு பொறந்த புள்ளனு ~பச்ச பச்சய பேசுனாவ பச்சாதாபம் இல்லாம~ பச்சோந்தி பயலுக~

~அவனுக பேசி இன்னைக்கு இருவது வருசமாச்சிலே~
இப்போ என் புள்ள~ பச்ச அட்டய வச்சிகிட்டு ~தேசம் தேசமா சுத்திடு திரியறான்~துட்டுக்கு
கொறயில்ல~சாதினு சொன்னவேன் எல்லாரும் ~என் பச்ச வீட்டு வாசல்ல நிக்கிரானுவ~

~என் புள்ள வந்ததும்
பச்சரிசி இடிச்சி ~பச்ச ஓலை வாசற்படியில கட்டி ~பச்ச சாதிகாரி பயள ~அவ அவ பொன்னுக்கு கட்டிக்கிறேனு~ பச்சோந்தி பயலுக~

~சாதினு எவனாச்சோம் எங்கிட்ட வந்தா ~ பச்ச பச்சய திட்டிபுடுவேன்~

இப்படி என் நண்பனின் தந்தை அவர் நண்பனிடம் வியர்வை சொட்ட சொட்ட பேசிக் கொண்டிருக்க, என் காதில் விழுந்த சில துளிகள் இவை.,
அதே நேரத்தில் எதிர்வீட்டு சுவரில் ஓர் வாசகம் கன்டேன், "பணமிருந்தால் சாதி தேவையில்லை, எம்மதமும் சம்மதம்" யென்று...!

எழுதியவர் : ஹரி (16-Dec-17, 10:47 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 781

மேலே