வறுமை
உதவிசெய்ய மனமிருக்கு...
கைக்கொடுக்க துணிவு இருக்கு...
அவர்கள் துன்பத்தினைக்
கேட்கச் செவியிருக்கு..
ஆறுதல் சொல்ல
வார்த்தை இருக்கு....
இவ்வளவு இருந்தும்
என்ன பயன்...
அவர்களைக் கண் போல
உடன்வைத்துப்
பார்த்துக் கொள்ள;
உணவோடு கல்வியை
அள்ளித்தர;
அவர்கள் வாழ்க்கையில்
உயரும் வரை உடனிருக்க;
அவர்களுக்கு வேண்டியதை
எல்லாம் செய்திட;
பணம் இல்லையே....
குற்றம் செய்யாது...
குற்றஉணர்ச்சியில் உள்ளேன்..
இக்குழந்தைகளுக்கு
முழுமையாய் உதவ முடியாமல்!!!
ஏழையாய் பிறந்துவிட்டேன்...
ஆனால்..
ஏழைகளைத் தாங்கிப் பிடிக்கும்
வேராக மாறுவேன் .....
என்றேனும் ஒருநாள்!!!!
என்னால் முடிந்ததை
நான் செய்துக் கொண்டே இருக்கிறேன்...
நீங்களும் உதவுங்கள் ...முடிந்தவரை!!
அன்புடன்..
மா.பானுமதி.