நல்லதுக்கு காலம் உண்டு

என்ன வாசன் எல்லோரும் இன்கிரிமெண்ட் வாங்கன சந்தோசத்தில் இருக்காங்க நீ மட்டும் சோகம இருக்க என்று கேட்டான் விக்னேஷ்.

ஒன்னுமில்லப்பா...

அட சொல்ற

இல்ல என் வேலைய செய்யறது இல்லாம,அடுத்தவங்க வேலையும் செஞ்சி கொடுக்கிறேன்.இன்கிரிமெண்ட் எனக்கு பெருசா எதுவும் போடல அதுதான் வருத்தமா இருக்கு என்றான் வாசன்.
நேரா போய் மேனேஜர்கிட்டேயே பேசவேண்டியதுதானே என்றான் விக்னேஷ்.

ஆமா இல்ல இப்பவே போறேன் என்று எழுந்தான் வாசன்.

சார் உள்ள வரலாமா என்று கேட்டு மேனேஜர் அறை உள்ளே சென்றான் வாசன்.

வாங்க வாசன் உக்காருங்க செல்லுங்க என்ன விஷயம் என்றார் மேனேஜர்.

சார் நான் இந்த கம்பெனியில் என் வேலையில்லாம எல்லாத்து வேலையும் இழுத்துபோட்டுக்கிட்டு செய்யிறேன் ஆனா இன்கிரிமெண்ட் பொதுவா போட்டுயிருக்கிங்களே சார்.

மேனேஜர் சிரித்துக்கொண்டே வாசன் அது உங்க தப்பு,அடுத்தவங்க லீவ் போட்ட அந்த வேலையை நீங்க செய்யறீங்க அவ்வளவுதான் சில நேரம் தப்பக்கூட இருக்கு.

சார் இருந்தாலும் கம்பெனிக்கத்தானே செய்றேன்.சில விஷயம் உங்க பார்வைக்கு வர்ரதில்ல மேலும் வெளி வேலையும் நான்தான்....
இல்ல வாசன் இதை கன்சிடர் பண்ணமுடியாது நீங்க போலாம் எனக்கு வேலை இருக்கு.

வாசன் வேகமாக எழுந்து வந்துவிட்டான்.

இரண்டு வரம் கழித்து வாசனுக்கு உடல் நலம் சரியில்லை என்று விடுப்பில் இருக்க கம்பெனியில்எந்த வேலை தொட்டாலும் அதன் சந்தேகங்கள் வாசனைதான் கேக்கவேண்டியிருந்தது.

ஒரு வாரம் கழித்து வாசன் வந்தான்.

வாங்க வாசன் உடம்பு எப்பிடியிருக்கு என்று வினவினார் மேனேஜர்.
பரவாயில்லை சார் என்றான் வாசன்.

முதல்ல சாரி வாசன்,உங்களை பத்தி இப்பதான் சரியா புரிஞ்சிக்கிட்டேன்.நீங்க எவ்வளவு வேலை பாத்தீங்கன்னு.இந்த ஒரு வாரத்தில் தெரிஞ்சிக்கிட்டேன்.உங்கள் இன்கிரிமெண்ட் நான் கன்சிடர் பண்றேன் என்றார்.

நன்றி சார்.

அதே நேரத்திலே இன்னோர் விஷயம் சார் நான் மத்தவங்களுக்கு பன்ற வேலையிலே தப்புயிருந்த என் பேரை சொல்ராங்க நல்ல பண்ணிகொடுக்கிற எந்த வேலையும் உங்க பார்வைக்கு வர்ரதில்ல,ஒவ்வரு இன்க்ரிமெண்ட்டும் எங்களோட உழைப்புக்கு நீங்க கொடுக்கிற மரியாதை அதை சரியான ஆளுக்கு பாத்து கொடுங்க.எனக்கு உடல் நலம் சரியில்லாத போனதுக்கு காரணம் இந்த மன உளைச்சல்தான்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (17-Dec-17, 11:50 am)
பார்வை : 195

மேலே