வாழ்க்கை
இலையுதிர் காலத்தின்
வெறுமையை
இளமை கடத்தியிருந்தது
வசந்த காலத்தின்
வளமை
வாலிபமாய் வந்தடைந்தது,
பொழிகின்ற தூறலின்
குளுமை
என்னவளின் பேச்சாய்,
ஆன்றவிந்து அடங்கிய
பூக்களின்
விரிவவளின் உறவு
விரிந்த பூவின்
மணமாய்
ஓர் கனி
பரம்பரைதனில் வந்த
புதுமையாய்
பழுத்த பாசம்
குளிரினால் வந்த
வெதுவெதுப்பென
உழைப்பு உரம்
போகிறது வாழ்க்கை
ஏனோ அல்லாமல்