நான் விரும்பும் பயணம்

அதிகாலை நேரமாய்
ஓர் பயணம் போகிறேன
அதில் தனிமை உலவிட
மனம் வெகுளி ஆகிறேன்
பனித்துளிகள் எதிர்வரும்
நிலைகளில் எல்லாம்
விழித்திரைகள் மின்னிட
நீர்த்துளி எழுகின்றதே
குளிரும் வெயிலும் சேர்கின்ற
தருணம்
குயிலோன்று அழகாய் இன்னிசைப்
பாடும்
அவ்விடியலைதான் நான் நெருங்குகிறேனோ??
இசைமழை என்னில் வெகுவாய்
விழுகின்றதே
நீர்நிலை ஓரம் ஓடிடும் ஓடம்
அதன்மேல் இருக்கின்ற பறவைகள் தோறும்
என் வருகையைக் கண்டு
பறந்திடும் நேரம்
அடடடடா...மனதிற்கு
இனியும் வேறென்ன வேண்டும்
கரங்கள் குவித்து
நன்றி் சொல்கிறேன்
இயற்கையே உனக்கு நானும்
என் வாழ்க்கை முழுதிலும்
இந்தப்பயணம் ஒன்றிலே
இனிமை தொடருதே
இதை இனியும் தொடருவேன்
விரைவில் வருகிறேன்....
அ.ஜீசஸ் பிரபாகரன்