வெள்ளையம்மா நாட்டுப்புற பாடல்

#வெள்ளையம்மா #நாட்டுப்புற பாடல்

பேர போல மனசுதானே
வெள்ளையம்மா..!
அதுல கொஞ்சம் கூட
கள்ளம் கபடம் இல்லையம்மா..!

வெள்ளந்தி பேச்சிக்காரி பேச்சு - அத
கொஞ்ச நேரம் கேட்டுபுட்டா போச்சு

சிரிச்சி சிரிச்சி மயக்கிடுவா சிறுக்கி
வெத்தலையா மடிச்சிடுவா சுருக்கி..!

கெண்டையாட்டம் கண்ணுலதான்
வலையும் - அந்த
கண்ணுக்குள்ள சிக்க மனசு
அலையும்..!

வெத்திலைய மென்னு
நாக்க நீட்டி
கடிக்க சொல்லி ஓடிடுவா
போக்கு காட்டி..!

கொத்துக்கறி சமைச்சி
ஊட்டும்போது
அவ கை வெரலும்
ருசித்திடுமே சேர்த்து..!

துள்ளித் துள்ளி
ஓடிடுவா மானா
தொட்டுக்கிட்டா
ருசிப்பாளே தேனா..!

கட்டுக்கோப்பு
ஒடம்புக்காரி அழகு
கட்டி போட்டுட்டாளே
பாசந்தானே கயிறு..!

எத்தனைதான்
பிறவி எடுத்தாலும்
என் வெள்ளையம்மா
துணையாகோனும்..!

#சொ. சாந்தி

(நிலாச்சோறு குழுமம் நடத்திய தலைப்புக்கான நாட்டுப்புற பாடல் போட்டியில்
வெற்றி வாகை சூடிய பாடல்.)

எழுதியவர் : சொ.சாந்தி (22-Dec-17, 10:09 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 234

மேலே