கானல் நீர் காதல்
கண்ணீர் அழகினில்
கண்டேன் அவளினை,
காதல் கொண்டேன்
இமைகள் மறைத்திட...
உடலினை பிரியும்
உயிரினை கூட,
உணர்ந்தேன் நானுன்
விழியினில் தேட...
காணும் நீரில்
கானல் நீராய்
உந்தன் பிம்பம்
எங்கும் எங்கும்...
நிலவும் இருளும்
நீயும் நானும்.
வாழ்வோம் நாமும்
உலகம் எங்கும் ...