உறவுகளும் பெண்களும்
இந்த காலத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தது பேசுரிமை கிடைத்தது என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், இவை எல்லாம் ஒரு பெண்ணின் குடும்பத்தில் கிடைத்ததா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஒரு பெண் தன் பிறந்த வீட்டில் வாழும் போதும் சரி புகுந்த வீட்டில் வாழும் போதும் சரி தன் இஷ்டத்திற்க்கு அவளாள் எதுவும் செய்ய முடியாது. அவரவர் வாழ்க்கையை அவர்கள் தான் வாழ முடியும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஒரு பெண் தான் வாழ முடியும். அவளின் பெற்றோர்களோ அல்லது அவளின் உறவினர்களோ வாழ முடியாது. ஒரு பெண் தன் இஷ்டத்திற்க்கு வாழவிட்டு பாருங்கள். அவள் இஷ்டத்திற்க்கு படிப்பு, வேலை, மணமகன் என்று கொடுத்து பாருங்கள் அவளின் வாழ்க்கை வளமாக இருக்கும். இப்போது இருக்கும் பெற்றோர்கள் ஒரு ஆண்களை தன் இஷ்டத்திற்க்கு வாழவிடுவது போல் பெண்களை வாழவிடுங்கள். பெண்ணை ஒரு பொம்மையாக நினைக்காதிற்கள் ஒரு உயிராக நினையுங்கள்.