வேலுநாச்சி வீரம்

விரித்தெழுந்த தலைமயிரும் விண் முட்டும் கொடுவாளும்,
போர்க்களம் நீ புக புதைபடும் வஞ்சகமும்,
ஆயிரம் படை தகர்த்து ஆளப் பிறந்த அம்பிகையே,
பெண்புலியின் சீற்றம் கண்டு வெள்ளயனும் வெகுண்டோட,
தினவெடுத்த அந்நியனின் திமிரறுத்த பெண்ணினமே,
பாரதி பார்த்திருப்பின் பாடாமல் ஓய மாட்டான்,
வரலாறு மறைக்கப்படினும் வற்றாப் புகழின் வாயிலாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்,
தென்னகத்தின் திறம் காத்த தீதொழித்த தெய்வமே,
நின் திறம் போற்றி சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் தாயே.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (25-Dec-17, 9:53 pm)
சேர்த்தது : Karthika Pandian
பார்வை : 168

மேலே