கிராமம் போலாமா

விடுமுறை பள்ளிக்கு விட்டாச்சு
பரிட்சை தொல்லைகள் முடிஞ்சாச்சு
படிப்பே இல்லாம விடிஞ்சாச்சு
கிராமம் போகவே முடிவாச்சு

கணினி அலைபேசி கூடஇல்லை
தொலைக்காட்சி தொணதொண பக்கமில்லை
அணிலும் மயிலும் ஆடக்கண்டேன்
பக்கத்தில் குயிலும் பாடக்கண்டேன்

வயலில் நண்டுகள் ஓடக்கண்டேன்
முயலும் ஹவ்ஆர்யூ கேட்கக்கண்டேன்
இதயம் கும்மாளம் போடக்கண்டேன்
உதயம் காணாமல் தூக்கம்கண்டேன்

சுத்தமான காற்றின் சுவாசம்கண்டேன்
சத்தமில்லா மனிதர் நேசம்கொண்டேன்
ஆகா இதுவன்றோ சிறப்பென்றேன்
தாகம் தீராது மீண்டும்செல்வேன்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (27-Dec-17, 5:10 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 52

மேலே