பூவுக்கு பொறந்த நாளு
பூவினம் சாராத பூ ஒன்று
பூமியில் பூத்த நாள் இன்று;
வானத்தில் வலம் வந்த நிலவொன்று
நிலத்தில் உதித்த நாள் இன்று;
வயலினில் விழுந்த விதை ஒன்று
நாற்றாகி துளிர் விட்ட நாள் இன்று;
வயிற்றினில் முளைத்த கரு ஒன்று
உருவாகி உயிர் பெற்ற நாள் இன்று;
என் வாழ்வினில் சிறந்த நாள் என்று?
என்னவளே உன் பிறந்த நாள் அன்று;
எனையே உனக்களித்த எனக்கு- வேறு
எதை பரிசளிப்பதென புரியவில்லை
அணிகலன்களை அணிவகுத்து அனுப்பட்டுமா?
உடைவகைகளை படையெடுக்க சொல்லட்டுமா?
காலணிகளுக்கு கடையொன்று திறக்கட்டுமா?
மலர்களிலே மஞ்சமொன்று விரிக்கட்டுமா?
செயற்கையற்ற தேசமொன்று அமைக்கட்டுமா?
இன்னும்... இன்னும்
எதை வேண்டுமாயினும் கோரு;
தடை தாண்டுவேன் நூறு;
அதை கொணர்வேன் பாரு.
என் நாட்காட்டியை அலங்கரிக்கும் இந்த நாளிற்கு என் நன்றி..
உன்னை இம்மண்ணில் உதிர்த்ததற்காக..
இறுதியாக...
என் ஆருயிரை அள்ளி
ஓர் வரியில் சொல்கிறேன்;
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.