கடவுளிடம் பதிலைத் தேடி
கடவுளே பதிலாக வருவார்...
உன் கண்ணீர்த்துளிகளின் பதிலாக வருவார்...
உன் மனக்காயங்களுக்கு மருந்தாக வருவார்...
உன் இழப்பிற்கு ஈடுசெய்ய வருவார்...
உன் வெற்றிடத்தில் ஆட்சிசெய்ய வருவார்...
உன் குறைவுகளில் நிறைவாக வருவார்...
உன் தோல்வியையெல்லாம் வெற்றியாக்க வருவார்...
உன் வறண்ட செவிகளில் நம்பிக்கையின் வார்த்தையாக வருவார்...
உன் கண்காணும் மாயைகளிலிருந்து விடுவிக்க வருவார்...
உன் தாழ்வில் தூக்கிவிட வருவார்...
உன் பேச்செல்லாம் ஞானமாக்க வருவார்...
உன் தடைகளை உடைத்தெறிய வருவார்...
உன் காயங்களுக்கு மருந்தாக வருவார்...
உன் குறைவுகளை நிறைவாக்க வருவார்...
உன் சூழ்நிலையின் கடினங்களை தளர்த்திட வருவார்...
உன் கால்களுக்கு பெலனாக வருவார்...
உன் இடறல்களில் ஆதரவாக வருவார்...
உன் சந்தர்ப்பங்களை உனக்கு சாதாகமாக்கிட வருவார்...
உன் கரங்களுக்கு உயர்வைக் கொடுக்க வருவார்...
உன் கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல வருவார்...
உன் திசையறியா ஓட்டத்தை சரிசெய்ய வருவார்...
உன் வாழ்வில் நீ காணாத அதிசயம் செய்ய வருவார்...
உன் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக வருவார்...
உன் வருத்தமென்னும் பாரத்தை சுமந்துசெல்ல வருவார்...
உன் நஷ்டங்களையெல்லாம் லாபமாக்க வருவார்...
உன் எல்லாவற்றிற்கும் அவர் மட்டுமே பதிலாக வருவார்...