அவள்!!

கார்மேக கூந்தலிலே,
வீசும் காற்றை தூற்றியவள்!!
நெடுவான நெற்றியிலே,
நிலவுபிறை வரைந்திட்டவள்!!
கோலவிழிப் பார்வையிலே,
கன்னல் மொழி பேசியவள்!!
கொவ்வைக் கிளி மூக்கினிலே,
உச்சி முதலாக நுகர்ந்திட்டவள்!!
பேரீச்சை உதடுகளாலே,
ரேகை முகத்தோடு பூசியவள்!!
அங்கம் தங்கம் மேனியிலே,
வானவில்லை உடுத்தியவள்!!
கொடியிடையின் மடிப்பினிலே,
காமத்தீயை ஊற்றியவள்!!
வாழைத்தண்டு கால்களிலே,
வெள்ளிக் கொண்டு பூட்டியவள்!!

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (29-Dec-17, 7:58 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 140

மேலே